சென்னை, மே 24: மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை வரவேற்று பல்வேறு கட்சி தலைவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக தலைவர். எனது நண்பர் ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.