புதுடெல்லி, மே 25: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வரும் ஜூலையில் 2019-2020-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.
வரும் 30-ந் தேதி புதிய அரசு மோடி தலைமையில் பதவியேற்க இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து வரும் ஜூலையில் 2019-2020-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
அனேகமாக பியூஷ் கோயல் நிதியமைச்சராகி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.