எம்பி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் பட நடிகை

சென்னை

சென்னை, மே 25: தமிழில் நடிகர் கர்ணாசுடன் இணைந்து அம்பாசமுத்திரத்தில் அம்பானி என்ற படத்தில் நடித்த நடிகை நவ்னித் மராட்டிய மாநிலத்தில் அமராவதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் 4 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று புதிய மக்களவைக்கு செல்கின்றனர். அவர்களுள் நடிகைகள் சுமலதா, நவ்னித், நவக்குமார் சாரணியா, மோகன்பாய் சஞ்சிபாய் டெல்கார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் நடிகை நவ்னித் தமிழ் படத்தில் நடித்தவர் ஆவார். மராட்டிய மாநிலத்தில் அமராவதி தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நடிகை நவ்னித் ரவி ரானா தனக்கு அடுத்தபடியாக வந்த சிவசேனா மூத்த தலைர்களில் ஒருவரான ஆனந்த் ராவ் அத்கலை 37,295 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

நவ்னித் ரவி ரானா வட இந்திய நடிகையாவார். தமிழில் சன் பிச்சர்ஸ் தயாரித்த அம்பாசமுத்திரத்தில் அம்பானி என்ற படத்தில் நடிகர் கர்ணாஸ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் வட இந்திய படங்களில் நடித்து வந்தார். நவ்னித் நடிகை என்பதை தவிர ஒரு சமூக சேவகருமாவார்.

இவரது கணவர் ரவி ரானா மராட்டிய சட்டசபையில் சுயேட்சை எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.