பட வாய்ப்பிற்காக காத்திருக்கும் மேகா ஆகாஷ்

சினிமா

தமிழ் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ் தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்தார்.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் உடன் இணைந்து மேகா ஆகாஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் நீண்ட காலமாக வெளியாகாமல் உள்ளது. இந்த படத்தில உள்ள அத்தனை பாடல்களும் ஹிட்டாகி உள்ளதால் இந்த படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்நிலையில் புதிய பட வாய்ப்புகளுக்காக போட்டோ ஷுட் நடத்தியுள்ள மேகா ஆகாஷ் நல்ல கதை அம்சமுள்ள படத்திற்காக காத்திருக்கிறார்.