சூர்யாவின் ஷூட்டிங் ஸ்பாட் ரகசியத்தை சொன்ன ரகுல் ப்ரீத் சிங்

சினிமா

செல்வராகவன் இயக்கத்தை சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ள படம் என்ஜிகே. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வரும் 31-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் படம் வெளியாகிறது. தெலுங்கில் முதல் முறையாக சூர்யா டப்பிங் பேசியுள்ளார். இந்நிலையில் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியதாவது:-

மற்ற இயக்குனர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் செல்வராகவன் கவனமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் யாரும் யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

வசனத்தை மறந்து விட்டு நடிக்க ஆரம்பித்தால், ‘கட்’ சொல்லி திரும்ப ஆரம்பிக்கச் சொல்வார். நானும், சூர்யாவும் எத்தனை முறை ‘டேக்’ வாங்கினோம் என்று கணக்கு தெரியாது. முகத்தில் மட்டுமல்ல, உடலிலும் அந்த கதாபாத்திரம் வரும் வரை விடமாட்டார். இப்படத்தில் வரும் ’அன்பே பேரன்பே’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.