சென்னை, மே 25: திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்ற சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்ட சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பயிலும் 11-ம்வகுப்பு மாணவர் ஜி.பி. ஹர்ஷவர்தன் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தார்.

திருப்பூரில் முத்தூரில் அமைந்துள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் திருப்பூர் மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கமும், விவேகானந்தா வித்யாலயா பள்ளியும் இணைந்து 48-வது தமிழ்நாடு மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்ற ஜூனியர் சதுரங்க போட்டியை நடத்தியது.
இந்த போட்டிகளில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 200 மாணவர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் கலந்து கொண்ட சென்னை முகப்பேர் வேலம்மாள¢பள்ளி மாணவர் ஜி.பி. ஹர்ஷவர்தன் 9 ரவுண்டுகளில் 7,5 பாயிண்டுகள் எடுத்து முதலிடத்தை பெற்றார். இந்த மாணவரை வேலம்மாள் பள்ளி நிர்வாகம் பாராட்டி, கவுரவித்துள்ளது.