சென்னை,மே 25: பல்லாவரம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 20பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பல்லாவரம் பகுதியில் கிளப் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அந்த தகவலின் படி பல்லாவரம் போலீசார் அந்தபகுதியில்தீவிர சோதனை நடத்தினர். அப்போது பல்லாவரம் பம்மல் மெயின்ரோட்டில் சூதாட்டம் கிளப் இயங்கி வந்தது தெரியவந்தது.

அங்கு சென்று போலீசார்  சோதனை நடத்தியபோது கிருஷ்ணன் (வயது 21), பெரியய்யா (வயது 46) கோபாலகிருஷ்ணன் (வயது 51) ஆகியோர் சேர்ந்து சூதாட்டம் கிளப் நடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நிர்வாகிகள் உட்பட சூதாட்டத்தில் ஈடுபட்ட 20பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 8 சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.