திருவாரூர் மே 25: காவிரி டெல்டா பகுதியை பாலை வனமாக மாற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்களவை யில் குரலெழுப்புவேன் என்று நாகை மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப் பட்டுள்ள எம்.பி. எம்.செல்வராஜ் தெரிவித்தார். திருவாரூர் வெற்றி பெற்ற வேட்பாளர் செல்வராஜ் சான்றிதழைப் பெற்ற பின் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காவிரி பாசன மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு குடிநீராதாரம் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எந்த வகையிலும் அந்த திட்டத்தை வேதாந்தா குழுமத்தின்மூலமாக செயல்படுத்துவதை அனுமதிக்க கூடாது என மக்களவையில் குரலெழுப்புவேன்.
சென்னையிலிருந்து புதுச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருத்துறைறப் பூண்டி, முத்துப் பேட்டை வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யவும், நாகப் பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் வரையிலான சாலையை கிழக்கு கடற்கரை சாலைத் தரத்துக்கு இணையாக தரம் உயர்த்தவும், கோடியக்கரை தஞ்சை வரையிலான 110 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பாடுபடுவேன்.

நாகை துறைறமுகத்தைத் தரம் உயர்த்தவும் , வேதாரண்யம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள கடலோர மீனவர் கிராமங்களில் சிறு துறைமுகங்கள் அமைக்கவும், மீனவர்களுக்கென தனியாக அமைச்சகம் ஏற்படுத்தவும், மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கவும், மீனவர்களுக்கு வழங்கப் படுவதைப்போல் வேளாண்மைத் தொழில், இயற்கை சீற்றறத்தினால் பாதிக்கப்படும் காலங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணத்தொகை கிடைக்க பாடுபடுவேன்.
திருவாரூர் காரைக்குடி வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் விரைவு ரயில்கள் இயக்கப்பாடுபடுவேன் என்றார்.