புதுடெல்லி, மே 25: இந்தியாவில் முதல் முறையாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் 5 தொகுதிகளில் மட்டுமே 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.
கேரளாவில் ஆலப்புழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஏ.எம். ஆரிப் வெற்றி பெற்றார்.

மீதி 4 இடங்களையும் தமிழ்நாட்டில் இருந்து பெற்றுள்ளன. தேசிய கட்சி அங்கீகாரத்திற்கான விதி முறைகளை இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் சேர்ந்து 100 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.