போர்ட்பிளேர், மே 26: நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் தென்கிழக்கே அமைந்த நிகோபார் தீவுகளில் இன்று காலை 7.49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 4.5 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், வணிக கட்டிடங்கள் சில சேதம் அடைந்தாக தெரிகிறது. மேலும் உயிரிழப்பு குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.