கொரில்லாவில் காமெடியை தாண்டி மெசேஜும் இருக்கும்: ஜீவா

சினிமா

நடிகர் ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள படம் கொரில்லா, இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் ஜீவா பேசியதாவது:- கொரில்லா படம் ஒரு எக்ஸ்டானரி எக்ஸ்பீரியன்ஸ். ஏன் இந்தப்படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால் இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு அதனால் தான். இந்தக் குரங்கு நல்ல ப்ரண்ட்லியா ஆகிவிட்டது. தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி. கொரில்லா மாதிரி ஒருபடம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை.

இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது. டான் சாண்டி இந்தக்கதையை என்னிடம் சொல்லும் போது ரொம்ப என்சாய் பண்ணிக்கேட்டேன். படத்தையும் என்சாய் பண்ணி நடித்தேன். பக்கா காமெடி மசாலா தாண்டி ஒரு நல்ல மெசேஜும் இருக்கும். ரொம்ப ஜாலியான ஒரு படத்தை எடுத்திருக்கோம் என்றார்.

இந்த விழாவில் அழிந்து வரும் உயிரினமான சிம்பான்ஸி இரண்டை திரைப்படக்குழு தத்தெடுத்தது. படம் வரும் ஜுன் மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது.