சாஹோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்துள்ள படம் சாஹோ. இந்நிலையில் சாஹோவின் சமீபத்திய போஸ்டர் ஒன்றை அவரது படக்குழு வெளியிட்டது. அதில் படத்தின் வெளியீட்டு தேதி 15 ஆகஸ்ட் 2019 என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சரித்திர சாதனை படைத்த பாகுபலி படத்துக்கு பிறகு ரெபல் ஸ்டார் பிரபாஸின் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் வானளாவிய ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. கதையை பற்றிய ஒரு துணுக்கு கூட வெளியாகாமலேயே இத்தகைய இமாலய எதிர்பார்ப்புகளை ஒரு திரைப்படம் உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை.

யு.வி. கிரியேஷன்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்க, சுஜீத் இயக்கியிருக்கும் இந்த சாஹோ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிறார் ஷ்ரத்தா கபூர். ஜாக்கி ஷெராஃப், மந்திரா பேடி, நீல் நிதின் முகேஷ், சுங்கீ பாண்டே மற்றும் ஈவ்லின் ஷர்மா ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.