சென்னை, மே 26: பள்ளிகரணை அருகே கல்குவாரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- செம்மஞ்சேரி இரண்டடுக்கு குடியிருப்பை சேர்ந்தவர் சிவா (வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஆனந்தி (வயது 14). 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனந்தி நேற்று முன்தினம் தனது உறவினருடன் அந்த பகுதியில் உள்ள கல் குட்டை ஒன்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரம் ஆகியும் திரும்பிவரவில்லை என்பதால் அவளுடன் சென்ற உறவினரிடம் விசாரித்துள்ளனர். அப்போது ஆனந்தி நீரில் மூழ்கியது தெரியவந்தது.  இது குறித்து பள்ளிகரணை போலீசில் ஆனந்தியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையில் பள்ளிக்கரணை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கடந்த 2 நாட்களாக கல்குட்டையில் ஆனந்தியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆனந்தி கல்குட்டையில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டார். இதையடுத்து சடலத்தை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.