ஜெயலலிதா, சசிகலா பற்றி மற்றுமொரு புதிய படம்

TOP-2 சினிமா

ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி புதிய படம் ஒன்றை பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த பட்டியலில் பாரதிராஜா, ராம் கோபால் வர்மா, விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர்.

பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் எடுத்து வருகிறார். இதில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யாமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் ‘தலைவி’ என்ற தலைப்பில் எடுத்து வருகிறார். இதில் கங்கனா ரணாவத் நடிப்பது உறுதியானது. ராம் கோபால் வர்மா ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை சசிகலாவை முன்னிறுத்தி இயக்கப்போவதாக அறிவித்தார். சசிகலா என்ற பெயரில் சசிகலாவின் படத்தையே போஸ்டரில் பயன்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது சசிலலிதா என்ற பெயரில், இன்னொரு படம் உருவாகிறது. இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்‘ நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம், இரண்டு பாகமாக உருவாகிறது.