முதல் சுற்றில் வீழ்ந்த வீனஸ் வில்லியம்ஸ்: ரசிகர்கள் அதிர்ச்சி

TOP-5 விளையாட்டு

பாரிஸ், மே 27: அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், கிராண்ட் ஸ்லாம் ஆட்டமான பிரெஞ்ச் ஓபன் போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள ரோலண்ட் காரோஸில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா ஸ்வெடோலினாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வீனஸ் வில்லியம்ஸ் வெளிப்படுத்தினார். இதனால் முதல் செட்டை 3-6 என எலினா ஸ்வெடோலினாவிடம் இழந்தார். அதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் எலினா ஸ்வெடோலிவின் சர்வீசை பிரேக் செய்த போதிலும் தனது சர்வீசில் தொடர்ந்து மோசமாக விளையாடியதால் வீனஸ் வில்லியம்ஸ், 3-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் இழந்தார்.

இதனால் வீனஸ் வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா சிவிடோலினாவிடம் 3-6, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.