சென்னை, மே 27: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 5 மணி முதல் இணையதளம் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னை விமான நிலைய்தில் இன்று காலை இணையதள சேவை பாதிக்கப்பட்டது.இதன் காரணமாக விமான நிறுவனங்கள் போர்டிங் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து விரைந்து சென்று ஊழியர்கள் கைகளில் போர்டிங் அட்டை கொடுத்து பயணிகளை அனுப்பி வைத்தனர்.2.50 மணி நேரம் தாமதமானதால் ஒரு பகுதிறயே இணையதளம் சரி செய்யப்பட்டது. விமா ன நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் அறிவிப்பு பலகைகள் இயங்காததால் பயணிகள் பார்வையளார்ளும் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்.பின்னர் 9மணியளவில் இனையதளம் சேவை தொடங்கியது.இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் தாமதமாக சென்றன.