சென்னை, மே 27: 64 வழக்குகள் உள்ளவர் 7வது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற ஆற்காடு சுரேஷ் (வயது 42) இவர் மீது 64 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே 6 தடவை குண்டர் சட்டத்தில் கைதாகி வெளியே வந்துள்ளார்.

7வது முறையாக மீண்டும் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு விட்டுள்ளா£. இதே போல் எர்ணாவூரை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 25) ராயப்பேட்டையை சேர்ந்த அப்துல் காதர் (வயது 24) எர்ணாவூரை சேர்ந்த அபிசேக் ராஜ் (வயது 23) புளிந்தோப்பை சேர்ந்த மணிமாறன், செங்குன்றத்தை சேர்ந்த நாகராஜ் ஆகியோரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் மீது கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனர்.