3-வது குழந்தைக்கு ஓட்டுரிமை கூடாது: ராம்தேவ் யோசனை

இந்தியா

புதுடெல்லி, மே 27:  இந்தியாவின் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்க வேண்டு மானால், மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை கிடையாது என மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பாபா ராம்தேவ் வலியுறுத்தி உள்ளார்.

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கூறுகையில், ‘அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியை தாண்டி விடக் கூடாது. அவ்வாறு தாண்டும் பட்சத்தில், அதை சமாளிப்பதற்கு நாடு தயாராக இல்லை. எனவே மூன்றாவது குழந்தைகளுக்கு ஓட்டுரிமை கிடையாது.

அந்தக் குழந்தைகள் பெரியவர்களானதும் தேர்தலில் போட்டியிடவும் அனுமதி கிடையாது என மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இது தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரே வழி என ராம்தேவ் தெரிவித்துள்ளார். மூன்றாவது குழந்தைகளுக்கு அரசு திட்டங்களும் கிடைக்கக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.