தீ விபத்து: 7 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

தமிழ்நாடு

விழுப்புரம். மே 27: விழுப்புரம் அடுத்த காராஜர் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ மளமள வென்று பரவி 7 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த வீடுகளில் இருந்த அனைத்துபொருட்களும் உரிந்தால் சேத மதிப்பு 20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வேலூர் மதுரா காமராஜ் நகர் கிராமத்தில் இரவு சுமார் 1 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிகொண்டு இருந்தபோது ஒரு வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதைபார்த்த செல்வராசு (வயது 60) அயப்பன் (வயது 26) அஞ்சாபுலி (வயது 58) ஜெயக்கொடி (வயது 60) சரவணன் (வயது 30) ஆறுமுகம் (வயது 55) சின்னராசு சத்தம்போட்டு காப்பாற்றுங்கள் என்றுஅலறியவாறு பிள்ளை குட்டிகளை தூக்கிக்கொண்டு வெளியில் ஓடி வந்தனர். பின்னர் இந்ததீ மற்ற 7குடிசைகளுக்கும் பரவியது.தீ கொழுந்து விட்டு எரிந்து மளமளவென முற்றிலும் சாம்பலானது. இந்த தீ விபத்தில் இரண்டு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது.

இந்த தீ விபத்தில் கட்டிய (உடுத்திய) துணிகள் (ஆடைகள்) தவிர வீட்டில் இருந்த உணவு தானியம் முதற்கொண்டு அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.
இந்த தீ விபத்தை தடுப்பதற்கு இரண்டு தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைக்க போராடி உள்ளனர். இந்த தீ விபத்தினால் சுமார் 20 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளதாக தீ விபத்தில் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை அறிந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் வேல்முருகன் மற்றும் முன்னால் கவுண்சிலர் தணிகாசலம், அதிமுக நிறுவாகி கொளஞ்சி, வழக்கறிஞர் செல்வராஜ் உடன் சென்று தீ விபத்தில் பாதிக்கபட்ட குடும்பங்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.