சென்னை, மே 27: கோயம்பேட்டில் உள்ள ஒரு ஒயின் ஷாப் பாரில் பணியாற்றி வருபவர் பாலமுருகன் (வயது 28) இவர் நேற்று நியூ காலனியில் வந்து கொண்டிருந்தபோது கத்தி முனையில் ஒருவர் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி பிரபாகரன் (வயது 26) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.