ராதாமோகனின் உதவியாளர் இயக்கியுள்ள கண்டதை படிக்காதே

சினிமா

இயக்குனர்கள் ராதாமோகன், சிம்புதேவன்,வேலு பிரபாகரன் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் ஜோதி முருகன். இவர் கபடம் என்ற படத்தை மிகவும் சிறிய பட்ஜெட்டில் இயக்கினார். 2014-ல் ரிலீஸான அந்த படத்தை அமேசான் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. இந்நிலையில் அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான கண்டதை படிக்காதே படத்திற்கு, அமேசான் உடன் பேச்சுவார்தை நடந்து கொண்டிருக்கிறது.

படம் பற்றி அவர் கூறுகையில், இது ஒரு ஹை கான்செப்ட் ஸ்டோரி லைனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சமான திரைப்படமாக இருக்கும். படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை படம் கவர்ந்துவிடும். படத்தின் இறுதிக் காட்சி வரையிலும் சஸ்பென்ஸ் இருந்துக்கொண்டேயிருக்கும் என்றார்.படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கிறார் இவர் தமிழில் பயமறியான், கபடம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் ஆர்யான் வில்லனாக நடித்திருக்கிறார்.

பிரீத்தி, சுஜி,வைஷாலி, ஜென்னி என நான்கு ஹீரோயின்கள் இதில் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு கொடைக்கானல், ஊட்டி, சென்னை, ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டடுள்ளது.