அமேதி, மே 27: அமேதியில் தனது ஆதரவாளரை சுட்டு கொன்றவர்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்றும், ராகுல் கூறியபடி தொகுதி மக்களிடம் அன்புகாட்ட வேண்டும் என்பதை நான் உறுதியோடு ஏற்று கொள்கிறேன் என்றும் ஸ்மிர்தி இரானி கூறியுள்ளார்.

உ.பி மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிஜேபி வேட்பாளரான மத்திய அமைச்சர் ராகுல் காந்தி 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஸ்மிர்தி இரானியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை வகித்து செயல்பட்ட பராவுலியா கிராமபஞ்சாயத்து முன்னாள் தலைவர் சுரேந்திரா சிங் கடந்த சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் ஸ்மிர்தி இரானி அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார்.

சுரேந்திராவின் பாடையை சுமந்து சென்று இறுதி சடங்குகளில் பங்கேற்றார். இச்சம்பவம் குறித்து ஸ்மிர்தி இரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமேதி தொகுதி மக்களை அன்புடன் அணுகுமாறு எனக்கு விடப்பட்ட வேண்டுகோளை நான் உறுதியுடனும், தெளிவுடனும் ஏற்று கொள்கிறேன்.

கட்சி தொண்டர்கள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். உயிரிழந்த சுரேந்திராவின் குடும்பத்திற்கு 11 கோடி பிஜேபி தொண்டர்களும் துணை நிற்பார்கள். மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் அரசுகளின் நோக்கம் எல்லோருக்கும் நீதிகிடைக்க வேண்டும் என்பதே ஆகும். கொலையாளிகள் எங்கு ஒளிந்திருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

தேவைபட்டால் கொலையாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கக்கோரி நான் உச்சநீதிமன்றத்தை அணுகுவேன்.சுரேந்திராவின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்காக நான் மட்டுமின்றி பிஜேபி தொண்டர்களும் உச்சநீதி மன்றத்தின் கதவுகளை தட்டுவோம். நான் மட்டுமின்றி சுரேந்திராவை சுட்டவர்கள் மற்றும் சுடுவதற்கு ஆணையிட்டவர்கள் ஆகியோர் மீது போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.