சென்னை, மே 27: ஆதம்பாக்கத்தை சேர்ந்த லாவண்யா வயது 23 என்பவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கேப்ஸ் காருக்காக சாலையேரம் காத்து நின்றார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று போர் லாவண்யா கையில் இருந்த செல் போனை பறித்து விட்டு தப்பியோடினர். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மோட்டார் சைக்கிள் பதிவெண்ணை வைத்து துப்புத்துலக்கினர்.

இதில் சஞ்சய் வயது 19, விக்னேஷ் வயது 19 மற்றும் பாலாஜி வயது 13 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  செல் போன் பறிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களில் சஞ்சய் பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல் படிப்பில் சேருவதாக உளளார். விக்னேஷ் பாலிடெக்னிக் படித்து வருகிறார். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.