புதுடெல்லி, மே 27: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கான விழா டெல்லியில் வரும் 30-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு நாடு முழுவதிலும் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள், முதலமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.