திருமலை, மே 28: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் திருப்பதியில் குடும்பத்துடன¢ சாமி தரிசனம் செய்தார்.

நேற்று மாலை திருமலைக்கு சென்ற அவர் கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கினார்.நேற்றிரவு வராக சாமி மற்றும் ஹயக்கிரீவர் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டார்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறக்கூடிய அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இதையடுத்து பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலிலும் முதலமைச்சர் பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு சென்னை புறப்பட்டார்.