கட்டித்தழுவி அன்பை பரிமாறிக்கொண்ட இளையராஜா, எஸ்பிபி

சினிமா

இளையராஜாவின் பாடல்களை மேடைக்கச்சேரிகளில் பாடிவந்த எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு திடீரென இளையராஜா நோட்டீஸ் அனுப்பி தன்னுடைய பாடல்களை தன் அனுதியில்லாமல் பாடக்கூடாது என கட்டளையிட்டார்.

இந்த காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா பாடல்களை பாடுவதை நிறுத்தினார் எஸ்பிபி. இதனால் இருவருக்கும் இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது. இரண்டு ஜாம்பவான்கள் பிரிந்ததால் இசை உலகம் வேதனையடைந்தது. இந்நிலையில், ஜனனி பாலு இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் புதிய படத்தில் எஸ்பிபி பாலசுப்பிரமணியம் ஒரு பாடலை பாடுகிறார்.

இதற்கான பாடல் பதிவு நேற்று நடைபெற்றது, அப்போது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, 96 படத்தை எடுத்த பிரேம் தன் அனுமதியில்லாமல் பாடல்களை படத்தில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்துள்ள இயக்குனர் பிரேம், உரிய அனுமதி பெற்ற பின்னரே படத்தில் இளையராஜா பாடல்களை இடம்பெற வைத்ததாக பதிலளித்துள்ளார்.