ஹன்சிகா தற்போது ‘மஹா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, கோவாவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு சிம்பு மற்றும் ஹன்சிகா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன அதிபர் மதியழகன், சிம்புவுடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, நாங்கள் 8 நாட்கள் கோவாவில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம். இதில் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என்றார்.

ஹன்சிகா முற்றிலும் ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார். அவரது கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கிறது. இயக்குனர் ஜமீல் மிகத் திறமையாக செயல்படுகிறார். எந்த ஒரு அழுத்தத்தையும் சவால்களையும் மிகவும் எளிதாக கையாள்கிறார், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணும் அவரை போலவே. இளைஞர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த குழுவும் எனர்ஜி£யக உள்ளது என்றார்.