புதுடெல்லி, மே 29:  ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் இன்று 5-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இவரது அமைச்சரவையில் 10 முகங்கள் ஆவர். 2000 ஆண்டிலிருந்து இவரது ஆட்சி நீடித்து வருகிறது. ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் 146 தொகுதிகளில் 112-ல் வெற்றி பெற்று பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதேபோல், ஒடிசாவில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 12இல் பிஜு ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றது.

இந்நிலையில், புவனேசுவரத்தில் உள்ள பிஜு ஜனதா தளம் கட்சி தலைமையகத்தில் அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் முதல்வர் பதவிக்கு நவீன் பட்நாயக்கை எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.  இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சியமைக்க நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் கணேஷி லால் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இன்று பதவியேற்று கொண்டது. அமைச்சரவையில் காபினெட் அந்தஸ்தில் 11 பேரும், இணை அமைச்சர் அந்தஸ்தில் 9 பேரும் பதவியேற்றனர். 10 புதுமுகங்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் கணேஷி லால் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்றுள்ளார்.