தர்மபுரி,மே 29: தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர்.எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

கூடத்தில் கலெக்டர் எஸ்.மலர்விழி, பேசியதாவது:- ஊரக பகுதிகளில் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் 270 வார்டுகளும் 200 வாக்குச்சாவடிகளும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 315 வார்டுகளும் 230 வாக்குச்சாவடிகளும், பென்னரிரம் ஊராட்சி ஒன்றியத்தில் 216 வார்டுகளும் 177 வாக்குச்சாவடிகளும், 94 வாக்குச்சாவடிகளும், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 318 வார்டுகளும் 222 வாக்குச்சாவடிகளும், மொரப்பு+ர் ஊராட்சி ஒன்றியத்தில் 156 வார்டுகளும் 91 வாக்குச்சாவடிகளும், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 204 வார்டுகளும் 122 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 2342 வார்டுகளும் 1671 வாக்குச்சாவடிகளும் அமைய வரைவு பட்டியல் சரிப்பார்க்கபட்டது. இது குறித்து கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் எழுத்துபூர்வமாக வழங்கிட வேண்டும்  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்எம்.காளிதாசன், நகராட்சி ஆணையர்மகேஸ்வரி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஜிஜாபாய், நேர்முக உதவியாளர்.சரவணன், சந்தானம், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.