செங்குன்றம், மே 29: செங்குன்றத்தில் பட்டய கணக்கர் படிப்பு படித்து வந்த கல்லூரி மாணவி குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- செங்குன்றம் துரை அப்துல் வகாப் தெருவில் வசிப்பவர் ரங்கநாதன் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் தேவி (24) சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் சார்ட்டட் அக்கவுண்டு 4-வது ஆண்டு படித்து வந்தார்.  இந்த ஆண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றுள்ளார்.

இதனால் மன வேதனை அடைந்த தேவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரங்கநாதன் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். வழக்கை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பிரேத பரிசோதனைக்காக தேவி உடலை சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகிறார்.

செங்குன்றத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.