மும்பை, மே 29: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவின் சாம்பியன் வாய்ப்பு குறித்து பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.
கடந்த 2011, 2015 ஆகிய ஆண்டிற்கான உலகக்கோப்பை சாம்பியனை சரியாக கணித்தவர், பிரபல ஜோதிடர் கிரீன் ஸ்டோன்லோபோ. 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரில் இந்திய அணி வெற்றிக்கண்டு கோப்பையை வசப்படுத்துமா? என்று அவர் கணித்துள்ளார்.

அதில், இந்திய கேப்டன் விராட் கோலியின் பிறந்த ஆண்டு 1986 அல்லது 1987 ஆக இருந்திருந்தால் இந்தாண்டு உலகக்கோப்பையை வெல்ல அவருக்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், அவர் பிறந்த ஆண்டு 1988. இதனால் இம்முறை அவருக்கு வாய்ப்பு குறைவுதான்.

இதேபோல், இயற்கையாகவே தோனிக்கு அதிர்ஷ்டம் அதிகம். ஆனால் தற்போது அவருக்கும் நேரம் சரியில்லை. ஒருவேளை உலகக்கோப்பை அணியில் தோனி இடம் பெறாமல் இருந்திருந்தால் இந்திய அணிக்கு சாம்பியன் வாய்ப்பு இருந்திருக்கும் என்றார்.