விழுப்புரம், மே.29: மூங்கில்துறைப்பட்டை அடுத்த குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் துரைசாமி (வயது 80). கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியில் சென்ற இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று பிரம்ம குண்டம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பரவது நிலத்தையொட்டி உள்ள சாத்தனூர் வலதுபுறக் கால்வாயில் துரைசாமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.