புதுச்சேரி,மே29: தட்ஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சி திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் இன்றுகாலை 10மணியளவில் சட்டமன்ற வளாகத்தில் துணை சபாநாயகர் சிவக் கொழுந்து, திமுக எம்எல்ஏ வெங்கடேசனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம், அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, நமச்சிவாயம், திமுக எம்எல்ஏ சிவா, முன்னாள் அமைச்சர் எஸ்பி சிவக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.