கார்டிஃப், மே 29: வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் எதிரணியின் ஃபீல்டிங் ஆர்டருக்கு, இந்திய வீரர் தோனி அறிவுரை கூறி மாற்றியமைத்த ருசிகர சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா-வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் நேற்று பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இந்தியாவின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி அதிரடி சதம் விளாசி (113 ரன்கள்) ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆட்டத்தின், 39-வது ஓவரில் பேட்டிங் செய்ய தயாராக இருந்த தோனி, தனக்கு பந்துவீச வந்த வங்கதேச பவுலரை திடீரென தடுத்து, எதிரணியின் ஃபீல்டிங் ஆர்டரை (மிட் விக்கெட்) மாற்றி அமைத்தார்.

இந்த ருசிகர சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஃபீல்டிங் ஆர்டர் சரியில்லாத பட்சத்தில், எதிரணியாக இருந்தாலும் தோனி கேப்டனாக செயல்படுவார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.