காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி மரியாதை

TOP-2 இந்தியா

புதுடெல்லி, மே 30: இன்றிரவு 7 மணியளவில் 2-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களில் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மோடி பதவி ஏற்கிறார். இன்றிரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவியேற்பு விழா நடைபெறுவதைத் தொடர்ந்து சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில், மோடி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். அவருடன் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.