சென்னை, மே 30: சாத்தங்காடு மற்றும் பேசின்பாலம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து. 2 கிலோ மாவா மற்றும் 7 கிலோ ஜர்தாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை, சாத்தங்காடு பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், திருவொற்றியூர், கிளாஸ் பேக்டரி ரோட்டில் தடை செய்யப்பட்ட மாவாவை விற்பனை செய்து கொண்டிருந்த பாண்டியன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ மாவா மற்றும் 7 கிலோ ஜர்தா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, புளியந்தோப்பு, டாக்டர் அன்சாரி தெருவில் குட்கா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த விநாயகமூர்த்தி என்பவரை பேசின்பாலம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ மாவா பறிமுதல்செய்யப்பட்டது.