லண்டன், மே 30: உலகக்கோப்பை தொடரின் துவக்க ஆட்டம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், 2-வது பந்திலேயே தென்னாப்பிரிக்க பவுலர் இம்ரான் தாஹிர் விக்கெட் வீழ்த்தினார். நடப்பு தொடரின் முதல் விக்கெட் இதுவாகும்.

12-வது உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கி ஜூலை 14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்றுவருகிறது. சற்றுமுன் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய துவக்க ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடிவருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டூப்ளஸ்சி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டி செய்துவருகிறது. தென்னாப்பிரிக்கா சார்பில் பவுலர் இம்ரான் தாஹிர் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, அடுத்து வீசப்பட்ட 2-வது பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ், கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார்.

இதன்மூலம், நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் விக்கெட்டை வீழ்த்திய , அதுவும் போட்டியின் 2-வது பந்திலேயே விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இம்ரான் தாஹிர் துள்ளிக்குதித்தார்.