லார்ட்ஸ், மே 30: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் சிலையை உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடக்கும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் மெழுகு சிலை மேட்மே டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது. முன்னதாக, இந்த சிலை திறப்பு விழா முடிந்த கையோடு, லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி முடியும்வரை (ஜூலை 14) இது இங்கேயே ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் உடையில் வடிவமைக்கப்பட்டுள்ள தனது மெழுகு சிலைக்கு க்ளவுஸ் (கையுறை) மற்றும் ஷூ ஆகியவற்றை கோலியே கொடுத்துள்ளாராம். வீரர்கள் போல்ட், மோ ஃபராஹ், சச்சின் சிலைகளுக்கு அருகிலேயே கோலியின் சிலையும் வைக்கப்பட உள்ளதாக அருங்காட்சியக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

உலகப்புகழ்பெற்ற மைதானத்தில் தோனிக்கு கவுரவம்:
லண்டனின் லார்ட்ஸ் மைதானம் உலகப்புகழ் பெற்றது. இதற்குமுன், இங்கிலாந்தில் நடந்த 4 உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டி இந்த மைதானத்தில் தான் நடந்தது. இந்தமுறையும், பைனல் ஆட்டம் இதே மைதானத்தில்தான் நடக்க உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மைதானத்தில் இந்திய கேப்டன் கோலியின் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டு அவருக்கு சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு தொடரில் இந்திய அணி இந்த மைதானத்தில் லீக் ஆட்டங்கள் கிடையாது. பைனலுக்குள் நுழைந்தால் மட்டுமே இந்த மைதானத்தில் இந்திய அணி கால்பதிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.