சென்னை, மே 30: தென்னிந்திய மிஸ் பட்டம் வென்ற வீரான் மிதுன் என்பவர் இன்று காலை சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து தன் மீது அவதூறு பரப்புவதாக புகார் கூறினார்.

இவர் வடபழனியில் உள்ள ஒரு ஓட்டலில் பேஷன் ஷோ நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வந்ததாகவும் இதைவைத்து சமூக வலைதளத்தில் தன்மீது அவதூறு பரப்பி வருவதாகவும் மனுவில் கூறியுள்ளார். மேலும் மிஸ் பட்டம் வென்ற தனக்கு சிலர் மிரட்டல் விடுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் அவதூறு பரப்பியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் பரவியுள்ள தகவல்களை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.இதுகுறித்து மீரான் மிதூன் நிருபர்களிடம் கூறுகையில் வட இந்தியர்களை வைத்து பேஷன் ஷோ நடத்தி வந்தனர். நான் தென் மாநிலத்தவர்களை வைத்து நடத்துவதால் என்னை மிரட்டுகிறார்கள் என்றார்.