திருவண்ணாமலை, மே 30: திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை சட்டவிரோதமாக 4 ஆயிரம் பேருக்கு கருக்கலைப்பு செய்த போலி மருத்துவ தம்பதிகளை போலீசார் கைது செய்து தீவிர வபிசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடைபெறுவதாக மாவட்ட காவல் அதிகாக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஈசான்ய லிங்கம் அருகே இருந்த ஒரு பேனரை சோதனை செய்தனர்.

அப்போது கடையில் இருந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் கருக்கலைப்பு செய்ய வந்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கந்தசாமி, காவல் அதிகாரி சக்கரவர்த்தி ஆகியோ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.

ஆய்வில், யாருக்கும் தெரியாத வகையில் கருக்கலைப்பு செய்யும் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ஸ்கேன் இயந்திரமும் அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக கலெக்டர் கந்தசாமி கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கார்ப்பிணி ஒருவர் திடீரென சிகிச்சைக்கு வராமல் இருந்தார்.

இது குறித்து விசாரித்தபோது கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.  அந்த பெண்ணின் செல்போனுக்கு வந்த அழைப்பை வைத்து அந்த எண்ணுக்கு தொடார்பு கொண்டபோது 10ம் வகுப்பு மட்டுமே படித்த கவிதா என்ற பெண் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. கிரிவல பாதையில் இந்த கடை உள்ளதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் முன் பக்கத்தில் பேன்சி கடை போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கருக்கலைப்பு மையத்தில் சுமார் 4000 பேருக்கு கருக்கலைப்பு செய்ததாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடைக்கு சீல் வைத்து கவிதா, அவரது கணவர்பிரபு ஆகியோரை கைது செய்துள்ளதாக உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் யாருக்கும்தெரியாமல் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மருத்துவமனையை நடத்தி வந்த தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.