சென்னை, மே 30: பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாதவரத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 39), புதுப்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (வயது 31). இவர்கள் இருவர்மீதும் அரும்பாக்கம் போலீசில் கொலை வழக்கு உள்ளது.

புளியந்தோப்பை சேர்ந்த விஜய்பாபு (வயது 22) மீது பேசின்பாலம் போலீசில் கஞ்சா வழக்கு உள்ளது. கொருக்குப்பேட்டையை சேர்ந்த இளவரசன் (வயது 25) மீது ஆர்கே நகர் போலீசில் ஒரு கொலை வழக்கு மற்றும் 2 கொலை முயற்சி வழக்கு உள்ளது.

இந்த நிலையில், இவர்கள் நால்வரையும், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.