செங்குன்றம், மே 30: இலங்கை அகதிகள் புழல் காவாங்கரை முகாமில் 947 பேர் தங்கியுள்ளனர். 323 குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு அடிப்படை வசதி குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமையில் ஆய்வு நடந்தது.

இந்திய அகதிகள் முகாம் கூடுதல் செயலர் கிருஷ்ணபகதூர்சிங், மறுவாழ்வு மைய, இயக்குனர், தினேஷ் பொன்ராஜ, கோட்டாட்சியர் ராஜேதிரன் , மாதவரம் தாசில்தார் ரமேஷ், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் உள்ள வீடுகள பழுதடைந்துள்ளதாகவும், குடிநீர்தட்டுப்பாடு, கழிப்பறை வசதி இல்லை எனவும், தெரு விளக்குகள் எரிவதில்லை உள்பட பல்வேறு குறைகளை தெரிவித்தனர். இந்தியாவிலேயே வாழ குடியுரிமை வழங்க வேண்டும்.

இலங்கை திரும்ப விரும்புபவர்களுக்கு தங்கள் உடமைகளை எடுத்து செல்ல கப்பல் வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர். முகாமில் இறந்த 5 பேர் குடும்பத்திற்கு அரசு உதவிநிதி தலா 5000 காசோலையாக வழங்கப்பட்டது.