சென்னை, மே 30: இந்திய அளவில் டிவிட்டரில் நேசமணி மீம்ஸ் டிரெண்டிங்காகி வரும் நிலையில் இது கடவுளின் பரிசு என வடிவேலு நெகிழச்சியுடன் கூறியுள்ளார். இந்திய அளவில் டிவிட்டரில் தற்போது டிரெண்டிங்கில் இருப்பது #ழிமீணீsணீனீணீஸீவீ. யார் இந்த நேசமணி டிவிட்டரில் டிரெண்டானது எப்படி என்று பாப்போம்.

ஃபேஸ்புக்கில் உள்ள சிவீஸ்வீறீ ணிஸீரீவீஸீமீமீக்ஷீs லிமீணீக்ஷீஸீமீக்ஷீs என்ற பக்கத்தில் சுத்தியல் ஒன்றின் படத்தினை பதிவு செய்து இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு விக்னேஷ் பிரபாகர் என்பவர் “இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரை தொடர்ந்து மற்றவர்கள் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், ‘‘#றிக்ஷீணீஹ்_யீஷீக்ஷீ_ழிமீsணீனீணீஸீவீ’ , ழிமீணீsணீனீணீஸீவீ எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது.

டிவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ள நேசமணி வேறுயாரும் இல்லை அவர் 10 வருடங்களுக்கு முன் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நம்ம வைகைபுயல் வடிவேலுவே.  சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த திரைப்படம் ப்ரண்ட்ஸ். கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப்போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி.

இந்த சீனை வைத்துதான் நெட்டிசன்கள் தேசிய அளவில் நேசமணிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடம் கேட்ட போது, நெகிழ்ச்சியுடன் மாலைச்சுடருக்கு பேட்டியளித்தார்.

பிரெண்ட்ஸ் படத்தில் நேசமணி என்ற என்னுடைய கதாபாத்திரத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு. இது கடவுளின் பரிசு. இந்த படம் 2001-ம் ஆண்டு வெளியானது. அப்போதே இது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நகைச்சுவை காட்சி 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்களிடம் வரவேற்பை பெற்றிருப்பதில் மகிழ்ச்சி.

இப்போது நான் படங்களில் நடிக்கவில்லை. மீண்டும் படங்களில் நடிக்கும் பொழுது இது குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்கும். இந்த மீம்சை இதுவரை நான் பார்க்கவும் இல்லை என்றும் அவர் கூறினார்.