தடம் படத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் நடித்து வரும் படம் ‘பாக்ஸர்’, இடைவிடாது உடற்பயிற்சியில் ஈடுபடுவதிலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும், ஆர்வம் உடையவர் நடிகர் அருண் விஜய். அதற்கு ஏற்றார்போல் இந்த ‘பாக்ஸர்’ படம் அவருக்கு அமைந்துள்ளது.

படத்திற்காக சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன் உடன் வியட்நாமில் அமைந்துள்ள உலகின் மிகவும் புகழ்பெற்ற தற்காப்புக் கலை பயிற்சி மையமான லின் பாங்கில் பயிற்சி பெறுவது ரசிகர்களிடையே உற்சாகத்தை தூண்டி இருக்கிறது.

ஒரு மாத கால கடுமையான பயிற்சிகளை முடித்து கொண்ட அருண் விஜய் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார். ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க உள்ளது.

இந்தப் படம் ஒரு புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரை பற்றியும், அவருக்குள் இருக்கும் தீய சக்தியை எதிர்த்து போராடும் ஒரு வீரனின் கதையை பற்றியது. ரித்திகா சிங் இந்த படத்தில் ஒரு விளையாட்டு பத்திரிகையாளரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை விவேக் இயக்குகிறார். டி. இமான் இசையமைக்கிறார்.