விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ படத்தின் முதல் வீடியோ பாடல்

சினிமா

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஐபிஎஸ் என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு இயக்குனர் அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘சிந்துபாத்’. ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இதில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். விவேக் பிரசன்னா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கதையின் முக்கியமான நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் ஜார்ஜ் நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு முடிந்துள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் வீடியோ பாடல் நேற்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே டீசர் வெளியாகி வைரலாகி இருக்கும் இந்த நிலையில் இந்த பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.