ஸ்ரீநகர், மே 31: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்து வரும் கடும் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

சோபியான் மாவட்டம் டிரகாட்-சுகன் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உடனே அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் திருப்பிச் சுட்டனர்.

இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப் பட்டான். மேலும் பயங்கரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கக் கூடும் என்பதால், தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.