தூத்துக்குடி, மே 31: தேசிய அளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு கட்டுப்பாடு முகாம் ஜூன் 6 வரை நடைபெறுகிறது.
மாவட்ட அளவிலான இந்த முகாமை விருதுநகர் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் அ.சிவஞானம் உப்பு சர்க்கரை பொட்டலம் வழங்கி துவக்கி வைத்தார்.

மேலும், உப்பு சர்க்கரை கரைசல் தயாரிக்கும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இத்திட்டத்தினால், மாவட்டத்தில் 1,52,550 குழந்தைகள் பயனடைவர்.என்று கூறினர்.மேலும் அங்கன்வாடி மையங்களில் மற்றும் மருத்துவமையங்களில் உப்பு சர்க்கரை கரைசல் தயார் நிலையில் வைத்திருத்தல்.

அனைத்து வீடுகளிலும் 5 வயதிற்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு உப்பு சர்க்கரை பாக்கெட் வழங்குதல்.அனைத்து தாய் மார்களுக்கும், குழந்தை வயிற்றுப் போக்கால் பாதிக்கப் படும் பொழுது அக்குழந்தைக்கு வழங்கப்பட வேண்டிய உப்பு சர்க்கரை கரைசல் தயார் செய்யும் முறை குறித்து உரிய விளக்கங்களுடன் செயல்முறையாக செய்து காட்டுதல். தடுக்கும் முறைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. இவ்வாறு ககெல்டர் தெரிவித்தார்.