சென்னை, மே 31: கோயம்பேடு மார்க்கெட் ஏ ரோடு18-வது கேட்டின் முன்பு நேற்று மாலை ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இது குறித்து, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த நபர், சூளைமேடு பகுதியை சேர்ந்த டில்லிபாபு (வயது 45) என்பதும், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்துவருவதும் தெரியவந்தது.

நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு புறப்பட்ட டில்லிபாபு, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார் என்பதும், அப்போது, அளவிற்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.