சென்னை, மே 31: சென்னையில் புதிய நல்லி பேஷன்ஸ் ஷோரூம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் ஆடைகள் மற்றும் நகைகள் கண்ணை கவரும் வகையில் பிரமாண்டமான முறையில் திறக்கப்பட்டுள்ளது. சென்னை தி நகரில் பனகல் பார்க் எதிரே நாகேஸ்வரன் சாலையில் 30 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட நல்லிபேஷன்ஸ் பட்டுச்சேலைகள், நகைகள் ஷோரூமை சேர்மன் நல்லிக்குப்புசாமி செட்டி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

இதுகுறித்து நிர்வாக இயக்குனர் நிரந்த் நல்லி கூறியதாவது:- தி.நகரில் புதியதாக திறக்கப்பட்டுள்ள நல்லி பேஷன்ஸ் ஷோரூமில் பாரம்பரியமிக்க பட்டுச்சேலைகள், தங்க நகைகளும் இங்கு கிடைக்கும் கார் பார்க்கிங் வசதியுடன் மிக பிரமாண்ட முறையில் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு என்று பிரத்யேக ஷோரூமாக நல்லி பேஷன்ஸ் திகழும். பழைய ஷோரூம் அருகில் இந்த புதிய ஷோ ரூம் அமைந்துள்ளது.

இதில் விசாலமான இடம், ப ட்டுச்சேலைகளை நிதானமாக பெண்கள் தேர்வு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மாடல்களில் பல்வேறு ரக துணிகள் மற்றும் சேலைகள் பெண்களை கவரும் வகையில் உள்ளது. அலுவலகம் செல்லும் மகளிர் கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், வெளிநாட்டு இந்திய பெண்களுக்கு ஏற்ற வகையிலும் பட்டு சேலைகள் மற்றும் பேன்சி சேலைகள் இங்கு கிடைக்கும்.

இளம் மகளிர் பாரம்பரிய பட்டுச்சேலைகளை புதுமையான டிசைன்களை அணிய விரும்புகின்றனர். இதற்கேற்ப சேலைகள் நல்லி பேஷன்ஸ் ஷேரூமில் அமைந்துள்ளது. 2 மாடியில் நிறுவப்பட்டுள்ள இந்த ஷோரூமில் பட்டுச்சேலைகள், டிசைனர் சேலைகள், காட்டன் சேலைகள், ரெடிமெட் ஆடைகள் இங்கு கிடைக்கும்.
முதல் மாடியில் நகை ஷோரூமும், பூஜைப்பொருட்கள் விற்பனை பிரிவும், 2வது மாடியில் சேலை ரகங்களும் உள்ளன.

சேலைகள் ஹேங்கரில் தொங்கவிடப் பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் பட்டுச்சேலைகளை கையில் எடுத்து தரம் பார்த்து வாங்கும் வசதி உள்ளது.
உலகம் முழுவதும் 31 ஸ்டோர்கள் உள்ளன. நல்லி சில்க்ஸ் பட்டுசேலை விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. மேலும் ஆன் லைனில் ஜவுளி வாங்க வலைதளம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இந்த புதிய நல்லி ஷோரூமில் இளம்தலைமுறை நிர்வாகிகள் நிர்வாகத்தில் பாரம்பரிய பட்டு ஜவுளி ஷோரூம், புதுமை பொலிவுடன் ஜொலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.