கார்டிப், ஜூன் 1: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சற்றுமுன் தொடங்கிய இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் ஜெயித்து ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து- கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி கார்டிப்பில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியுள்ளது. இலங்கை வீரர்கள் அரைசதம் கடப்பதற்குள் நியூசிலாந்து பவுலர் ஹென்றி வீசிய பந்தில், மளமளவென விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

தற்போதைய நிலவரப்படி, இலங்கை அணி 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் மட்டுமே சேர்த்து விளையாடி வருகிறது.